என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கிரிக்கெட் டெஸ்ட்
நீங்கள் தேடியது "கிரிக்கெட் டெஸ்ட்"
ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்மித் மற்றும் வார்னர் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல என்று கவாஸ்கர் காட்டமான வகையில் பதில் அளித்துள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. சிட்னி டெஸ்டில் இரண்டு நாட்கள் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.
இந்திய அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. சிலர் இந்திய அணியை பாராட்டுவதைவிட, ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததுதான் அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘‘இருவரும் ஆஸ்திரேலிய அணியில் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல’’ என்று கவாஸ்கார் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் விளையாடியது இந்தியாவின் தவறல்ல. இருவரின் தடையை அவர்களால் குறைத்திருக்க முடியும். ஆனால் ஒரு வருடத்தடை ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு நல்லது என்று நினைத்துள்ளனர். கிரிக்கெட் போட்டியை தவறான வழிக்கு இழுத்துச் செல்லும் வீரர்களுக்கு இது உதாரணமாக இருக்கும் என்பதால் இதை எடுத்திருக்கலாம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனையைப் படைத்துள்ளது.’’ என்றார்.

‘‘தற்காலிக கேப்டனை தெரியுமா?’’ என தன்னை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கு ரிஷப் பந்த் பதிலடி கொடுத்துள்ளார். #AUSvIND
மெல்போர்னில் நடைபெற்ற ‘பாக்சிங் டே’ டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரை ஆஸ்திரேலிய கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ரொம்பவே சீண்டினார். ‘‘ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷப் பந்த்) ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த அணிக்கு பேட்ஸ்மேன் தேவை. அதனால் ஆஸ்திரேலியாவில் இருப்பதை கொஞ்ச நாள் நீட்டித்துக்கொள்.
ஹோபர்ட் அழகான நகரம். தங்குவதற்கு ஒரு சொகுசு குடியிருப்பை அவருக்கு வழங்கிவிடலாம்.... அப்புறம்... நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்து செல்லும்போது, நீதான் என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் சரியா...’’ என்று கூறி கேலி செய்தார்.
இதற்கு ரிஷப் பந்த் சுடச்சுட பதிலடி கொடுத்திருக்கிறார். நேற்று டிம் பெய்ன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் நின்ற ரிஷப் பந்த், ஜடேஜாவை நோக்கி ‘‘நமது சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். எப்போதாவது தற்காலிக கேப்டனை (ஸ்மித்துக்கு தடை விதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி கேப்டனாக்கப்பட்டவர்) பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவரை நீ அவுட் ஆக்க தேவையில்லை. ஏனெனில் அவருக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். எப்போதும் பேசிக்கொண்டு இருப்பார். பேச மட்டுமே அவருக்கு தெரியும்’ஷ என்றார்.
பிறகு அருகில் நின்ற மயாங்க் அகர்வாலிடம், ‘‘தற்காலிக கேப்டன் என்ற வார்த்தையை கேள்விபட்டு இருக்கிறாயா? எனக்கு தெரியும்’’ என்று கூறி கிண்டலடித்தார். இந்த பேச்சுகள் எல்லாம் ஸ்டம்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் பதிவானது.
ரிஷப் பந்தின் பேச்சை கேட்ட நடுவர் அவரை அழைத்து எச்சரித்தார்.

×

X